CPI State Council Meeting

December 27, 2018


பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்

ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஈரோடு அருகே பெருந்துறையில் சக்தி திருமண மண்டபத்தில் டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நா. பெரியசாமி ( முன்னாள் எம்.எல்.ஏ), டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் மற்றும் கே. ஆர். திருநாவுக்கரசு ( மாவட்டச் செயலாளர் ) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கட்சி கொடியை ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா எம். பி கலந்து கொண்டு தேசிய அரசியல் நிலைகளையும், கட்சியின் தேசியக் குழு முடிவுகளையும் விளக்க உரையாற்றினார். தமிழக அரசியல் நிலைமை குறித்து மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விளக்கி பேசினார். மாநிலத் துணைச் செயலாளர் கே. சுப்பராயன் அமைப்பு நிலைத்துறைப் பணிகள் குறித்து விளக்கி கூறினார். மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன் வேலை அறிக்கை முன்வைத்தார். இவைகள் மீது உறுப்பினர்கள் விவாதித்தனர். நிறைவாக, அரசியல் நிலை, அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகள் மாநிலக் குழுவில் ஒருமனதாக ஏற்கப்பட்டன. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் விவரங்களுக்கு...